இல்லாத மரியாதையை தேடாதீர்கள்…இயக்குனர் செல்வராகவனின் இன்றைய தத்துவம்..!!

இயக்குனர் செல்வராகவன் எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், அவ்வபோது டிவிட்டரில் ரசிகர்களுக்கு தத்துவத்தை கூறி வருகிறார். கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் டிவிட்டரில்  ” அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ ! நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது அது வாழ்க்கையில் ஒரு முறைதான் என்பதை கடவுளும் நம்மிடம் கூறவில்லை ” என பதிவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து இன்று, ” இல்லாத மரியாதையை தேடாதீர்கள் ” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் சிலர் உண்மைதான் சார் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இயக்குனர் செல்வராகவனின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், இயக்குனர் செல்வராகவன் தற்போது விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போல 7G ரெம்போ காலனி படத்தின் 2-வது பாகத்திற்கான கதை எழுதும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.