அன்னையர் தினத்தில் நடிகை அபிராமி நற் செய்தி ஒன்றை அறிவித்துள்ளார்.
விருமாண்டி திரைப்படத்தில் அன்னக்கிளி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் பவன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை அபிராமி, அவரும் கணவர் ராகுலும் பெற்றோர் ஆனதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ‘கல்கி’ என்ற பெண் குழந்தையை தத்து எடுத்ததாகவும் அதன் பின் வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிட்டதாகவும் அபிராமி தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து கூறியதாவது ” அன்பு நண்பர்களே, ராகுலும் நானும் இப்போது ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், கல்கி கடந்த ஆண்டு நாங்கள் எங்கள் மகளை தத்தெடுத்தோம், அது எல்லா வகையிலும் வாழ்க்கையை மாற்றிவிட்டது.
View this post on Instagram
இன்று நான் ஒரு புதிய தாயாக அன்னையர் தினத்தை கொண்டாடும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. உங்களுடைய ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் , நடிகை அபிராமி திருமணம் ஆனதை தொடர்ந்து சற்று சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் சினிமாவிற்குள் நடிக்க வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.