INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய அஸ்வின் ..!

INDvsENG : இந்தியா, இங்கிலாந்து அணி இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியானது நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் இந்திய அணியின் பந்து வீச்சானது மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக குலதீப், அஸ்வின் பந்து வீச்சானது மிகவும் சிறப்பாக இருந்தது. அஸ்வினுக்கு இந்த போட்டியானது சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் ..?

நேற்று தொடங்கிய போட்டிக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானும் ஆன ரிக்கி பாண்டிங் அஸ்வினை பற்றி சில ஸ்வாரஸ்யமான விஷயங்களை செய்தியாளர்களிடம் கூறினார். அவர் பேசுகையில், “அஸ்வின் ஒரு ஸ்பின் மாஸ்டர், உலகில் உள்ள  அனைத்து மைதானங்களிலும் அஸ்வின் ஒரு ஸ்பின் மாஸ்டராக திகழ்கிறார். அஸ்வின் எப்போதுமே ஒரு அபாரமான கிரிக்கெட் வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் அவருக்கு பயிற்சியளிக்க 2 ஆண்டுகள் எனக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது.

Read More :- INDvsENG : 14-வது வீரராக 100கிளப்பில் இணைய போகும் அஸ்வின் ..!

அஸ்வின் எப்போதுமே கிரிக்கெட் பற்றி பல கோட்பாடுகளை (Theory) கொண்டிருப்பார். அந்த கோட்பாடுகள் எல்லாம் பல்வேறு தத்துவங்களை கொண்டிருக்கும். அது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு பவுலராக அவர் வளர்ந்து கொண்டே இருக்கிறார். கடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் போது ஆஸ்திரேலிய மண்ணிலேயே அஸ்வின் சிறப்பாக விளையாடினர். தற்போது, அவர் சொந்த மண்ணில் விளையாடி வருகிறார்.

நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டியிலும் சிறப்பிக்க விளையாடி உள்ளார். அதே போல இந்த கடைசி போட்டியிலும், அதுவும் அவரது 100-வது போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடுவர் என நம்புகிறேன்”, என்று ரிக்கி பாண்டிங் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார். அவர் கூறியது போல அஸ்வினும் முதல் நாளின் இரண்டாவது செஷனில் 4 விக்கெட்டுகளை எடுத்தார். குறிப்பாக ஒரே ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment