சேலத்தில் ஆகஸ்ட்10 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சேலத்தில் ஆடித் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அறிவித்துள்ளார். சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்வார்கள்.

இந்தாண்டுக்கான ஆடி திருவிழா வருகிற 26-ம் தேதி (ஆடி மாதம் 10-ம் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 16-ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான 26-ம் தேதி இரவு 8 மணிக்கு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து, அடுத்த மாதம் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு சக்தி அழைப்பும், 10 -ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பொங்கல், மாவிளக்கு, பிரார்த்தனை செய்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த நிலையில், சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment