ஆக்சிஜன் தருகிறேன் என்ற பெயரில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இயக்க முயற்சி – வைகோ

கொரோனா சூழலை பயன்படுத்தி ஆக்சிஜன் தருகிறேன் என்ற பெயரில், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இயக்க முயற்சிக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பல மருத்துவமனைகளில் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்பட்டதாக புகார் எழுந்து வருகிறது.  இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்க பல முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஓத்திவைத்தது.

இதற்க்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்பதால், ஸ்டெர்லைட் ஆணையை திறக்க நுமதி தரக்கூடாது. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என மக்கள் நல்வாழ்வு அமைச்சரும், செயலாளரும் தெளிவுபடுத்தியுள்ளார். ஆக்சிஜனை ஒரு இடத்தில இருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டுசெல்ல பக்குவரது வசதிகள் தான் தேவை. கொரோனா சூழலை பயன்படுத்தி ஆக்சிஜன் தருகிறேன் என்ற பெயரில், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இயக்க முயற்சிக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையின் முயற்சிக்கு தமிழக அரசு அனுமதி தரக்கூடாது.’ என்று தெரிவித்துளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.