பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீட்டில் தாக்குதல் – 13 பேர் மீது வழக்குப்பதிவு

சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், 13 பேர் மீது வழக்குப்பதிவு 

தமிழக பாஜக மாநில துணைத்தலைவராக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் தபால் தந்தி காலனியில் வசித்து வருகிறார்.  நேற்று முன்தினம் அவர் நாகர்கோவிலுக்கு சென்ற பின், அவரது வீட்டிற்கு 15 பேர் கொண்ட மர்ம கும்பல்  வந்துள்ளனர்.

இந்த கும்பல் வீட்டின் மீது சராசரியாக கற்களை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. மேலும்  சில பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து போலீசருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நேற்று இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் தூண்டுதலின் பேரினால் தான்இந்த தாக்குதல் நடைபெற்றதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று திமுக கவுன்ஸிலர் மூன்று பேர் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment