#BREAKING: அரையாண்டு விடுமுறை – சிறப்பு வகுப்புக்கு தடை!

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு அசைன்மென்ட்களை மட்டுமே வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறை பற்றி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 16ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. அதாவது, 8 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிவடைகிறது.

இந்த சமயத்தில் தமிழ்நாட்டில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை, 9 நாட்கள் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment