இன்று முதல் ஏடிஎம் பணப்பரிவர்த்தனை கட்டணம் உயர்வு..! எவ்வளவு வசூலிக்கப்படும் தெரியுமா..?

இன்று முதல் இலவச ஏடிஎம் பண பரிவர்த்தனையை மேல் மேற்கொள்ளளும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் ரூ.20 இருந்து ரூ.21  ஆக உயர்த்தப்படுகிறது. 

இன்று முதல் இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பை தாண்டினால் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த ஜூன் மாதம், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஜனவரி 1  முதல் ஏடிஎம்களில் இருந்து மாதாந்திர இலவச பரிவர்த்தனை மேல் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு கட்டணத்தை அதிகரிக்க வங்கிகளுக்கு அனுமதித்தது.

இந்நிலையில், இன்று முதல் ஏடிஎம்மில் இலவச பரிவர்த்தனை பிறகு நாம் செய்யும் பணம் மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைக்கு மேல் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்

ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு மாதமும் பணம் மற்றும் பணமில்லா ஏடிஎம் பரிவர்த்தனைகளை வழங்குகிறது. ஒரு வங்கியின் வாடிக்கையாளர் அதே வங்கியின் ஏடிஎம் மூலம் மாதம் 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பணப்பரிவர்த்தனை கட்டணமில்லாமல் செய்யலாம்.

கடந்த ஆண்டு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் இலவச ஏடிஎம் பண பரிவர்த்தனையை மேல் மேற்கொள்ளளும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் ரூ.20 இருந்து ரூ.21  ஆக உயர்த்தப்படுகிறது.

author avatar
murugan