#AskAtlee மூலம் பிகில் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் அட்லி !

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் #AskArchana ஹாஸ்டேக் மூலம் தங்களது கேள்விகளை கேட்கலாம் என்று தனது டிவிட்டரில் பதிவிட்டார். அதைப்போலவே ரசிகர்களின் கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்தார்.
இந்த முறை பிகில் படத்தின் இயக்குநர் அட்லி அவர்களும் #AskAtlee ஹாஸ்டேக் மூலம் கேட்கும் கேள்விகளுக்கு இன்று மாலை 6 மணி அளவில் பதிலளிக்க இருப்பதாக போஸ்ட் ஒன்றைய வெளியிட்டுள்ளார்.

author avatar
Vidhusan