அடேங்கப்பா! கோவிலுக்குள் இவ்வளவு ரகசியம் இருக்கா?

Temple secret- கோவிலுக்கு சென்றால் மட்டும் ஏன் நம் மனம் அமைதியாக இருக்கிறது ,அந்த இடத்தில் அப்படி என்ன ரகசியம் உள்ளது என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

பழமையான கோவிலின் சிறப்பு  :

பழமையான கோவில்களுக்கு அதிக  சக்தி இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் கோவிலை கட்டுவதற்கு முன்பே கிரக அமைப்பினை மையமாக வைத்து நேர்மறை சக்தி அதிகமாக எங்கு இருக்கோ அங்கு தான் சிலைகள் அமைத்தனர் , பொதுவாக வடக்கு தெற்கு பகுதியில் அதிக நேர்மறை சக்தி இருக்கும்.

கோவிலில் நம் வெறும் கால்களில் நடக்கும் போது அங்குள்ள பாசிட்டிவ் எனர்ஜி நம் பாதங்கள் வழியாக நமக்குள் செல்லும்.இதனால் தான் கோவிலுக்குள் செருப்பு அணிய கூடாது என சொல்கிறார்கள் .

மணி ஓசையின் சிறப்பு  :

கோவிலுக்குள் அடிக்கப்படும் மணியின் ஒலியானது   நம் மூளையின் உணர்வை தூண்டி ஏழு வினாடி வரை நீடிக்கிறது, இதனால் நம் உடலில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் காணாமல் போய்விடும்.

தீப ஒளியின் சிறப்பு  :

ஏன் கருவறைக்குள் தீபாராதனை காட்டுகிறார்கள் தெரியுமா? இறைவன் இருக்கும் கருவறைக்குள் இருட்டாகத்தான் இருக்கும் அந்த இருட்டான இடத்தில் ஒரு சிறு ஒளி தெரியும் போது அதை பார்க்கும் நம் கண்களின் பார்வை உணர்வு  தூண்டப்படுகிறது .அது மட்டுமல்லாமல் கடவுள் ஒளியின் வடிவத்தில் தான் இருக்கிறார் என்பதை உணர்த்தத்தான். இறைவன் ஒளியின் வடிவில் தான் இருக்கிறார் என்று சிவவாக்கியர் என்ற சித்தரும் கூறுகிறார்.

தேங்காய் ,வாழைப்பழத்தின் சிறப்பு :

இந்த உலகத்தில் எத்தனையோ பழங்கள்  இருந்தாலும் ஏன் பூஜைக்கு வாழைப்பழமும், தேங்காயும்தான் வைக்கப்படுகிறது என்றால்  தேங்காய் யாரும் சாப்பிட்டு தூக்கி போடும் விதையிலிருந்து முளைப்பதில்லை அதை முழுமையாக வைத்தால் தான் முளைக்கும்.

அதுபோல்தான் வாழைப்பழத்தை எச்சில் செய்து  தூக்கி போட்ட தோளிலிருந்து முளைப்பதில்லை. இவ்வாறு எச்சில் செய்யப்பட்டு உருவாக்கப்படாத பழம் என்பதால் தான் பூஜைக்கு உரியதாக கருதப்படுகிறது. உதாரணமாக மாம்பழம் பலாப்பழம், கொய்யா போன்றவை எல்லாம் நாம் சாப்பிட்டு தூக்கி போடும் விதையிலிருந்து முளைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்று இந்த ரகசியத்தை மறந்து தற்போது எல்லா பழங்களையும் பூஜைக்கு பயன்படுத்துகிறோம் .

 

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment