இரண்டே நாள் இந்த ஊரில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமாக வசூல் மழை பொழியும் அசுரன்!

தனுஷ் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் அசுரன். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கி உள்ளார். கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சிமா மோகன், பசுபதி, பிரகாஷ் ராஜ்,  கென் கருணாஸ், டீஜே, ஆடுகளம் நரேன், பவன், இயக்குனர் பாலாஜி சக்திவேல் என பலர் நடித்துள்ளனர்.
ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒரு அப்பா தனது குடும்பத்துக்காகவும், தனது பிள்ளைக்காகவும் என்னவெல்லாம் செய்கிறார் எனவும், அந்த நேரத்தில் அவர் எதிர்கொண்ட சாதிய தீண்டாமையும் அதன் கொடுமைகளையும் படமாக்கியிருந்தார் இயக்குனர் வெற்றிமாறன்.
படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் சென்னையில் மட்டும் இரண்டு நாளில் 1.08 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாம் நாளான சனிக்கிழமை மட்டும் 58 லட்சம் வசூல் செய்துள்ளது இத்திரைப்படம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.