அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும்-முதலமைச்சர் அறிவுறுத்தல்

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் (Michaung) புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிகை நடவடிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரு நாட்களுக்கு மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அவர்களது பகுதியில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

உதவிக்கு:

TN SDMA மாநில உதவி எண்: 1070,

மாவட்ட உதவி எண்: 1077

வாட்சாப்: 9445869848

author avatar
murugan