Assembly Election: 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.!

Assembly Election: 2024ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

READ MORE – மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

அந்த வகையில், 4 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மே மாதம் 13ம் தேதியும் அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் 19ம் தேதியும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறத எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 மாநில சட்டசபைகளுக்கும் நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 27 என்றும், வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி ஏப்ரல் 19 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE – இந்த வருடத்தில் 5வது முறை.! பிரதமர் மோடியின் இன்றைய தமிழக பயணம்.!

175 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. 147 சட்டசபை தொகுதிகள் அடங்கிய ஒடிசாவில் உள்ள மே 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE – இன்று தான் கடைசி… SBIக்கு மீண்டும் கெடு வைத்த உச்சநீதிமன்றம்.!

அதே வேளையில், 60 சட்டசபை தொகுதிகள் கொண்ட அருணாச்சல பிரதேசத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 32 சட்டசபை தொகுதிகள் அடங்கிய சிக்கிம் மாநிலத்தில் ஏப்ரல் 19ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment