அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் ராஜினாமா..!

அசாம் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சர்பானந்தா சோனோவால் தனது ராஜினாமா கடிதத்தை அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகியிடம் கொடுத்துள்ளார்

சமீபத்தில் தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், 126 தொகுதிகளை உள்ளடக்கிய அசாம் மாநிலத்தில்  தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.

இதில், 60 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்ற பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே தேர்தலை எதிர்கொண்டது. இதனால், முதல்வர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் போட்டியாளர்களாக முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பாஜக தலைமை இருவரையும் அழைத்து நேற்று ஆலோசனை  நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிம் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா நாளை  பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு பிறகு  பதில் தெரியும் என தெரிவித்தார். இந்நிலையில்,  அசாம் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சர்பானந்தா சோனோவால் தனது ராஜினாமா கடிதத்தை அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகியிடம் கொடுத்துள்ளார்.

author avatar
murugan