103 வயதில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த முதியவர்..!வைரலாகும் வீடியோ..!

மகாராஷ்டிரா மாநிலத்தில்,103 வயதாகும் ஷாம்ராவ் இங்க்லே என்ற முதியவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிராவின்,பால்கர் மாவட்டத்தில் உள்ள வீரேந்திர நகரைச் சேர்ந்த ஷாம்ராவ் இங்க்லே என்ற 103 வயதாகும் முதியவர்,சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானதால் பால்கரில் உள்ள கிராமப்புற கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து,சிகிச்சை பெற்று வந்த முதியவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து சனிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதுகுறித்து,அம்மருத்துவமனையின் டாக்டர் ஒருவர் கூறுகையில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஷாம்ராவ் என்ற 103 வயது முதியவர்,தனக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக ஊழியர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.இதனால்,கொரோனாவிலிருந்து விரைவில் குணமடைந்த முதியவர் மே 8 ஆம் தேதி சனிக்கிழமையன்று புன்னகையுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்”,என்று கூறினார்.

இதனையடுத்து,பால்கர் மாவட்ட கலெக்டர்,மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் மானிக் குர்சல் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் இணைந்து கைகள் தட்டி,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த முதியவர் ஷாம்ராவ் இங்க்லேவுக்கு மலர்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.