#AsiaCup2022: ஆசிய கோப்பை மகளிர் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

வங்க தேசத்தில் நடைபெறும் ஆசியக்கோப்பை மகளிர் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.

நடந்து முடிந்த ஆசியக்கோப்பை ஆடவருக்கான தொடரில் இந்திய அணி, சூப்பர் 4 சுற்றுலேயே வெளியேறியது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய இறுதி போட்டியில், இலங்கை அணி பாகிஸ்தானை தோற்கடித்து 2022-ஆம் ஆண்டுக்கான ஆசியக்கோப்பையை வென்றது. தற்போது, 7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 1 முதல் 15 வரை வங்கதேசத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில், ஆசிய கோப்பை மகளிர் தொடரில் பங்கேற்கும் இந்திய பெண்கள் அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 1-ஆம் தேதி இலங்கைக்கு எதிராக விளையாடுகிறது. அக்டோபர் 7-ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, தயாளன் ஹேமலதா, மேக்னா சிங், ரேணுகா தாகூர், ராஜேஸ்வரி வஸ்த்ரகர், பூஜா வஸ்த்ரகர் கெய்க்வாட், ராதா யாதவ், கே.பி. நவ்கிரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

காத்திருப்பு வீரர்கள்: தனியா சப்னா பாட்டியா, சிம்ரன் தில் பகதூர்.

author avatar
Muthu Kumar

Leave a Comment