அர்ஜுனா விருது பெற்ற ஆணழகனுக்கு ரூ.25,00,000 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த தமிழக அரசு.!

  • ஆசிய மற்றும் சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் தங்கம் வென்று, மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரன்.
  • தமிழக அரசு அரசு சார்பாக ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.

சென்னை கே.கே. நகரை சேர்ந்த பாஸ்கரன் கடந்த 2018-ம் ஆண்டு புனேயில் நடைபெற்ற ஆசிய அளவிலான பாடிபில்டிங் போட்டி மற்றும் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பாடிபில்டிங் போட்டியில் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார்.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் மத்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருது கொடுத்து கவுரவித்தது. பின்னர் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை சிறப்பினமாக வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் 15% சதவீத தொகையான ரூ.3,75000 அவரது பயிற்சியரான அரசு என்பவருக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்