நீங்கள் கொரோனா வைரஸால் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறீர்களா? அப்ப நீங்க இதெல்லாம் கடைபிடிக்க வேண்டும்!

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கு இந்தியா அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். 

இப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு : 

  • தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய நல்ல காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும். 
  • வீட்டில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். 
  • தனிமைப்படுத்தப்பட்ட நபர் எக்காரணம் கொண்டும் வீட்டாரை விட்டு வெளியே செல்லக் கூடாது. 
  • வீட்டை தினமும் 3 முறையாவது கிருமி னாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். 
  • தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டுக்குள்ளேயே அங்குமிங்கும் செல்லாமல் தான் அறையிலேயே இருக்க வேண்டும். 
  • தனிமைப்படுத்தப்பட்டவருடன் வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும். 
  • தனிமாய்ப்படுத்தப்பட்டாவார் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. 
  • தனிமையிலிருப்பவரின் உடை, படுக்கை விரிப்பை உத்தரால் தனியாக சோப்பு நீரில் ஊராவாய்த்து துவைக்க வேண்டும். 
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.