ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வரும் பயணிகள் 7 நாள் வீட்டு தனிமை ..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மும்பைக்கு வரும் பயணிகளுக்கு 7 நாள் வீட்டு தனிமைப்படுத்தல், ஆர்டி-பிசிஆர் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய மாறுபாட்டான ஓமைக்ரான் அதிகரித்து வரும் நிலையில், துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் வெளியிட்ட உத்தரவின்படி, துபாய் உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் அனைத்து சர்வதேச … Read more

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு 3 வேளை உணவு…! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்…..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில்  தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும், மே-24ம் தேதி முதல் 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களது வீட்டிலேயே … Read more

டெல்லியில் கொரோனா வைரஸ்! வீட்டு தனிமைப்படுத்தல் குறித்த புதிய விதிகள்!

டெல்லியில் வீட்டு தனிமைப்படுத்தல் குறித்த புதிய விதிகள். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்த பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இந்நிலையில், டெல்லியில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கான புதிய விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள்  கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள், நோயின் தீவிர தன்மை குறித்து அறிந்து கொள்வதற்காக கொரோனா பரராமரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதே … Read more

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் பிரபலம்.!

நடிகை பிந்து மாதவியின் அப்பார்ட்மென்டில் உள்ளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பிந்து மாதவி, ஒரு மாடலிங் துறையை சார்ந்தவர் என்பதால் ஒரு விளம்பர படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு பிரபலமானர். கடந்தாண்டு … Read more

நீங்கள் கொரோனா வைரஸால் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறீர்களா? அப்ப நீங்க இதெல்லாம் கடைபிடிக்க வேண்டும்!

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கு இந்தியா அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.  இப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு :  தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய நல்ல காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும்.  வீட்டில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.  … Read more

தனிமையில் பிரியங்கா சோப்ரா! காரணம் என்ன?

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.  இந்த நோய் குறித்து பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.  இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகையும், UNICEF நிறுவனத்தின் தூதரான இவர் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இவர் 8 நாட்களாக தனது கணவர் நிக் உடன், ‘home quarantine’ … Read more