அறங்காவலர்கள் நியமனம்! தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு!

கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்வது குறித்து இந்து தர்ம பரிஷத் தாக்கல் செய்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் சஞ்சய் கரோன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வரப்பெற்றது.

இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் அறங்காவலர்கள் நியமனம் செய்திட மாவட்டக் குழு அமைத்து அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் மற்றும் திருக்கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணைகளின் நகல்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்விசாரணையின்போது அறங்காவலர்களை நியமனம் செய்திட தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை நீதியரசர்கள் பாராட்டியதுடன் விரைவில் அனைத்து திருக்கோயில்களுக்கும் அறங்காவலர்கள் நியமனம் செய்திட அறிவுறுத்தி, வழக்கினை ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்