ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா முரளி.?

கடந்த 2018 ஆண்டு வெளியான பதாய் ஹோ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. 

நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான எல் கே ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் இரண்டு திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார்.

அதாவது கடந்த, 2018 ஆண்டு இயக்குனர் அமித் ஷர்மா இயக்கத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம் பதாய் ஹோ. ஆயுஷ்மான் குர்ரானா, நீனா குப்தா, சன்யா மல்ஹோத்ரா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.

இந்த தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனிகபூர் வாங்கியுள்ளதாகவும், படத்தில் ஆர் ஜே பாலாஜி மற்றும் அபர்ணா முரளி இருவரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.