பிக் பாஸ் சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை..!-வீடியோ வெளியிட்ட சாண்டி மாஸ்டர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சாண்டி மாஸ்டர் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவரது நடனத்திறமையால் பிரபல நடிகர்களின் படங்களுக்கு நடனம்  அமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி, காலா மற்றும் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படங்களுக்கு இவர் நடனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குட்டி பட்டாஸ் என்ற பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் ரேபா ஜான் நடனமாடியுள்ளனர். இந்த பாடல் 100 மில்லியன் நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் கதாநாயகனாக 3:33 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சாண்டி மாஸ்டர் டோரோத்தி சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. தற்போது சாண்டிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by SANDY (@iamsandy_off)