2 ஆண்டுக்கு பின் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல்!

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றது.

கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது,  வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை வென்ற நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, இங்கிலாந்துக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரஸ்ஸல் இடம்பிடித்திருப்பது முக்கிய வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இடம்பிடித்திருந்த ஆண்ட்ரே ரஸ்ஸல், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஃபார்மில் இல்லாதவர்களை எடுக்காதீங்க! டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் கேப்டனா?.. கவுதம் கம்பீர் கருத்து!

இதுபோன்று, கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் மூன்று வீரர்களும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 4 ஆண்டுகளாக டி20 அணியில் இடம்பெறாத ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் ஆல்ரவுண்டர் மேத்யூ ஃபோர்டு போன்ற வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த டி20 போட்டிகளில் ரோவ்மன் பவல் கேப்டனாகவும், ஷாய் ஹோப் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், இங்கிலாந்துக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளுக்கு மட்டுமே இந்த அணி என்றும் பின்னர் அணியில் தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும் எனவும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதனிடையே, அடுத்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதனால், இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவிருக்கும் கடைசி டி20 தொடர் இதுவாகும். எனவே, டி20 உலகக்கோப்பையை குறிவைக்கும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறக்கப்பட்டுள்ளது.

WI டி20 அணி: ரோவ்மன் பவல் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணை கேப்டன்), ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெர்ஃபான் ரூத்ரபோர்டு, ரொமாரியோ ஷெப்பர்ட்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்