ஆந்திர மாநிலம் அருகே போலீசார் மீது செம்மரக்கடத்தல்காரர்கள் கற்கள் வீசி தாக்குதல்!

ஆந்திர மாநிலம்  திருப்பதி அருகே செம்மரக்கடத்தல்காரர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறி, வானத்தை நோக்கி ஆந்திர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 36 செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை பின்புறம் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மலைபாதை வழியாக செம்மரங்களை வெட்டி வந்த கடத்தல்காரர்களை போலீசார் சுற்றி வளைக்க முயற்சி செய்தனர்.
இதனால் போலீசார் மீது கடத்தல்காரர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஹரிகிருஷ்ணா என்ற காவலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி இரண்டு சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது செம்மரங்களை ஆங்காங்கே வீசிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பினர்.
source: dinasuvadu.com

Leave a Comment