தனுஷ், போனிகபூர் போட்டிபோட்ட பாலிவுட் ஹிட் பட தமிழ் ரீமேக்கை ஈசியாக கைப்பற்றிய தியாகராஜன்!

பாலிவுட் சினிமாவில் சென்றாண்டு வெளியாகி நல்ல பெயரையும் வசூலில் வாரி குவித்த திரைப்படம் அந்தாதுன். இந்த படம் சிறந்த ஹிந்தி படத்திற்கான தேசிய விருதையும் வென்றது கூடுதல் சிறப்பு. இந்த படத்தில் நடித்து இருந்த ஆயுஷ்மான் குரானாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

இந்த படத்தில் நாயகன் கண் தெரியாதவராக நடித்து இருப்பார். படம் பிளாக் காமெடி திரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட்டது.

இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய நடிகர் தனுஷ் மற்றும் போனிகபூர் போட்டி போட்டனர், ஆனால் இந்த போட்டியில் சத்தமில்லாமல் நடிகர் தியாகராஜன் அந்த படத்தின் தமிழ் ரீமேக்கை வாங்கிவிட்டார். அந்த படத்தில்தியாகராஜனின் மகனும் முன்னாள் முன்னணி தமிழ் சினிமா நாயகன் பிரசாந்த் நடிக்க உள்ளார். என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.