FIFA World Cup 2018:மொராக்கோவை 1-0 என்ற கணக்கில் ஈரான் அணி வீழ்த்தியது!

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இங்கிலாந்து பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ், ரஷிய பாடகி எய்டா பாரிபுலினா நிகழ்ச்சிகள் கவர்ந்தது.

32 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் தொடக்க நாளாக நேற்று ஒரே ஒரு ஆட்டம் நடந்தது. ரஷியா – சவுதி அரேபியா அணிகள் மோதின.

இதில் ரஷியா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இன்று  மாலை 5.30 மணிக்கு நடந்த முதலாவது ஆட்டத்தில் உருகுவே – எகிப்து (ஏ) அணிகள் மோதியது.இந்த போட்டியில் எகிப்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 கோல் அடித்து உருகுவே அணி வெற்றி பெற்றது.

இன்று  இரண்டாவது ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஈரான் – மொராக்கோ அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் முதல்பாதி நேர ஆட்டம் கோலின்றி முடிவடைந்தது.
2-வது பாதி நேரத்திலும் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் வலது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து ஈரான் அணிக்கு ப்ரீஹிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மொராக்கோ அணியின் பவுஹட்டவுஸ் தலையில் பட்ட பந்து கோலானது. இதனால் ஈரான் 1-0 என முன்னிலைப் பெற்றது.
அதன்பின் மொராக்கோ அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஈரான் 1-0 என வெற்றி பெற்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment