#TNBudget2021Live: வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு

வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அவரது உரையில்,2021-22 -ஆம் ஆண்டில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு  செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.