ஆன்லைன் மருந்து விற்பனையில் அமேசான் – பெங்களூருவில் துவங்கியுள்ள புதிய சேவை!

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யும் பணியில் களமிறங்கியுள்ள அமேசான் நிறுவனம்.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர இன்னும் குறைந்து விட்டது என்ற நற்செய்தி இல்லை. இந்நிலையில் கொரானா வைரஸ் தொற்று அதிகரித்ததில் இருந்து வீடுகளில் இருந்தபடியே ஆன்லைனில் மருந்துகளை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் இந்தத் துறையில் ஈடுபட்டு வந்த நிறுவனங்களும் நல்ல வருமானம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியது. இதன் எதிரொலியாக தற்போது சென்னையை சேர்ந்த நெட்மாஸ் என்ற ஆன்லைன் மருந்து டெலிவரி நிறுவனத்தை வாங்குவதற்கு, முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் பொருட்கள் விற்பனை சேவையில் முன்னணியில் இருக்கக்கூடிய அமேசான் நிறுவனமும் தற்போது மருந்து விற்பனையில் களமிறங்கி இருக்கிறது. கடந்த மே மாதம் பெங்களூருவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை அமேசான் தொடங்கி இருந்தது. இந்நிலையில் தற்பொழுது மருந்துகளையும் இந்தியா முழுவதும் விற்பனை செய்வதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

author avatar
Rebekal