லெபனான் குண்டு வெடிப்பு: இந்தியா 58 மெட்ரிக் டன் மருத்துவ மற்றும் உணவு பொருட்ளை அனுப்புகிறது.!

மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட 58 மெட்ரிக் டன் அவசரகால உதவியை இந்தியா லெபனானுக்கு அனுப்பியுள்ளது.

ஆகஸ்ட் -4 அன்று பெரிய குண்டுவெடிப்பில் 170 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 2,750 டன் அதிக வெடிக்கும் அம்மோனியம் நைட்ரேட் கையிருப்பில் இருந்து தீ ஏற்பட்டபோது ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் பெய்ரூட்டில் ஏற்பட்ட துயர வெடிகளுக்குப் பின்னர் இந்தியா லெபனான் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. முக்கியமான மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட 58 மெட்ரிக் டன் அவசரகால உதவியை ஐ.ஏ.எஃப் .சி 17 விமானத்தில் பெய்ரூட்டுக்குச்செல்கிறது என்று வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று டிவிட்டரில் தெரிவித்தார் .

இந்நிலையில் குண்டுவெடிப்பால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீட்டை இந்தியா லெபனான் அரசாங்கத்திடம் கேட்டறிந்தாக வெளிவிவகார அமைச்சகம் கடந்த வாரம் கூறியிருந்தது. அதன் அடிப்படையில் முக்கியமான மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட 58 மெட்ரிக் டன் அவசரகால மனிதாபிமான உதவிகளை இந்தியா லெபனானுக்கு அனுப்பியுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.