ஏர்டெல் டிஜிட்டலில் ஸ்டார் சேனல்கள் இனி கிடைக்காது?

இனிமேல் ஏர்டெல் DTHல், ஏர்டெல் டிஜிட்டல் மற்றும் ஸ்டார் இந்தியா நிறுவனங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் தோல்வி அடைந்துள்ளதால்  ஸ்டார் குறித்த எந்த சேனலும் இடம்பெறாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. இன்று முதல் அனைத்து ஸ்டார் சேனல்களும் அதாவது ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் பிளஸ், ஆசியாநெட், நேஷனல் ஜியாக்ரபி, விஜய் டிவி மற்றும் ஸ்டார் ஜலசா ஆகிய சேனல்கள் ஏர்டெல் DTH ல் இருந்து நீக்கப்படுகிறது. இந்த சேனல்கள் தேவைப்படுபவர்கள் நேரடியாக ஸ்டார் நிறுவனத்திடம் இருந்து பெற்று கொள்ளலாம்.

ஏர்டெல் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் இன்று முதல்  ஒவ்வொரு தனித்தனி ஸ்டார் சேனல்களுக்கும் தனித்தனியாக பணம் கட்டி பார்த்து கொள்ள வேண்டும். எனினும் இது தற்காலிகமானது என்றும் விரைவில் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment