உலக அளவில் 15% கொரோனா இறப்புக்கு காரணம் காற்று மாசுபாடு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

உலக அளவில் 15% கொரோனா இறப்புக்கு காரணம் காற்று மாசுபாடு.

உலக அளவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் கெமிஸ்ட்ரி கல்வி மைய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஐரோப்பாவில் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய கொரோனா இறப்புகளின் விகிதம் சுமார் 19 சதவீதமாகவும், வட அமெரிக்காவில் இது 17 சதவீதமாகவும், கிழக்கு ஆசியாவில் 27 சதவீதமாகவும் கண்டறிந்துள்ளனர்.

கார்டியோவாஸ்குலர் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவில், கொரோனா வைரஸிலிருந்து இறப்புகளின் விகிதத்தை முதன்முதலில் மதிப்பிட்டுள்ளது. இது உலகின் கொரோனாவுடன் தொடர்புடைய, ஒவ்வொரு நாட்டிற்கும் காற்று மாசுபாட்டின் மோசமான விளைவுகள் குறித்து வெளியான முதல் ஆய்வறிக்கையாகும்.

காற்று மாசுபாட்டிற்கும் கொரோனா இறப்புக்கும் இடையிலான நேரடி விளைவுகள் மற்றும் தொடர்புகள் குறித்தது அல்ல என்று இந்த ஆய்வு குறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். காற்று மாசு[முட்டாள் பலருக்கும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு சுகாதார நிலைமையை  மோசமாக்குவதால், எளிதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், உலகளவில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட சிறப்புகளில், 15% நீண்ட காலமாக காற்று மாசுபாட்டினால், பாதிக்கப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.