அதிமுக செயற்குழு கூட்டம்  நிறைவு

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

அதிமுகவில் நீண்ட நாட்களாவே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதனிடையே தான் இன்று அதிமுக செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.இந்த செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் ,முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து இன்றே முடிவெடுக்க செயற்குழுவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தற்போது அதிமுக செயற்குழு கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது.