ஆஹா..! பிரியாணிக்கு சைடிஷ்னா இது மட்டும் தான்..!

Brinjal gravy-பிரியாணிக்கு ஏற்ற கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • கத்தரிக்காய் =5-6
  • வேர்க்கடலை =4 ஸ்பூன் [வருத்தது ]
  • வெள்ளை எள்ளு =2 ஸ்பூன்
  • வெந்தயம் =அரை ஸ்பூன்
  • கடுகு,சீரகம் ,மிளகு =அரை அரை ஸ்பூன்
  • எண்ணெய் =5 -6ஸ்பூன்
  • வெல்லம் =அரை ஸ்பூன்
  • வெங்காயம் =2
  • தக்காளி =2
  • பச்சை மிளகாய்= 2
  • மிளகாய் தூள் =1/2 ஸ்பூன்
  • மல்லி தூள் =1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
  • புளி =எலுமிச்சை அளவு
  • இஞ்சி பூண்டு விழுது =அரை ஸ்பூன்

செய்முறை:

முதலில் கத்திரிக்காயை முட்டை  கத்திரிக்காய்க்கு நறுக்குவது போல் காம்புகளை மட்டும் நீக்கி கீறி  எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை 50 சதவீதம் எண்ணெயிலே வேக வைத்துக் கொள்ளவும் .

பிறகு வேர்க்கடலை, வெள்ளை எள்ளு, வெந்தயம் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும் .இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், மிளகு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள்,மஞ்சள் தூள்  ஆகியவற்றையும் சேர்த்து கிளறி கத்தரிக்காயையும் சேர்த்து புளிக்கரைசலையும் ஊற்றி கிளறிவிட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இப்போது எண்ணெய்  பிரிந்து வந்திருக்கும் ,இந்த நேரத்தில் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலையை அதில் சேர்த்து கிளறி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து, வெல்லம்  சேர்த்து இறக்கினால் பிரியாணிக்கு ஏற்ற கத்திரிக்காய் கிரேவி தயார்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.