வேளாண் பட்ஜெட்.. 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்பு…!

சட்டப்பேரவையில் 4-வது முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்  தாக்கல் செய்து வருகிறார். 2024- 25 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர்  உரையாற்றி வருகிறார்.

அப்போது பேசிய அவர் “வேளாண்மை துறையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்து வேளாண் உற்பத்தியுடன் நின்று விடாமல் உழவர் பெருமக்களின் நலன் முக்கியத்துவம் அளித்து வரும் முதல்வர் வேளாண் தற்போது உள்ள சவால்களை சாதனைகளை மாற்றி அதன் மூலம் விவசாயிகளின் நலன் பேணி காத்திட பல அரிய திட்டங்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை துறையால் மூன்று ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

முதல்வர் வேளாண்மைக்கென தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தியதன் காரணமாக  2020-21-ம் ஆண்டு 152 லட்சம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பு 2022-23 ஆம் ஆண்டில் 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. அரசால் செயல்படுத்தப்பட்ட சீர்மிகு திட்டங்களால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் ஊக்கத்துடன் செய்த சாகுபடியால் 202-23 ஆம் ஆண்டு 114 லட்சத்து 91,000  மெட்ரிக் டன்னாக உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்து கிடப்பில் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நடப்பாண்டிலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

 

 

 

author avatar
murugan

Leave a Comment