விவசாயிகளை கவரும் வகையில் வேளாண் பட்ஜெட்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நேற்று தமிழக அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த சூழலில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்படி, வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று பேரவையில் தாக்கல் செய்கிறார்.

இன்று சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்..!

2021ல் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து வேளாண்துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2023-24ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் 2024-25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் வணிக பிரிவுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய திட்டங்களும் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இன்றைய வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளை கவரும் வகையில் அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment