ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட அக்னி சிறகுகள் படக்குழு!

இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் ‘அக்னி சிறகுகள்’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பணிகள் கொல்கத்தாவில் முடிந்துள்ளது.
இந்நிலையில், இப்படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யாவிற்கு செல்கின்றனர். இந்த படப்பிபிடிப்பில் அக்சரா ஹாசன் இணைந்துள்ளார். இப்படப்பிடிப்பு ரஷ்யாவின் மாஸ்க்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெற இருக்கிறது. இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் மற்றும் ஆக்சன் காட்சிகளை படமாக்க இருக்கின்றனர்.
 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.