128 வருடஙகளுக்கு பிறகு அடைக்கப்பட்ட ஏழுமலையான் நடை .!

 திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருகின்றன. அவர்களில் குறைந்தது 80 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர். இதனால் திருப்பதியில் எப்போதும் பஸ் நிலையம், ரயில் நிலையம் , முடி காணிக்கை செலுத்தும் இடம் , வைகுண்டம் மற்றும்  தங்கும் அறையில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதும்.

தினமும் 15 ஆயிரம் வாகனங்கள் அலிபிரி சோதனை சாவடி வழியாக திருமலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் காரணமாக வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு வாரம் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று முன்தினம் நண்பகல் 12 மணிவரை திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர் அவர்கள் கடந்த 19-ம் தேதி வந்தவர்கள்.முன் நேற்று முன்தினம் அதிகாலை சுப்ரபாத முதல் அபிஷேகம் வரை அனைத்தும் நடைபெற்றது.

ஆனால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த 1892 -ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை இரண்டு நாட்கள் அடைக்கப்பட்டு, அதன்பிறகு தற்போது தான் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan