12 வருடங்கள் பிறகு உலகக்கோப்பையில் களமிறங்கி ரசிகர்களை ஏமாற்றிய தமிழக வீரர் !

தமிழகத்தை சார்ந்த  தினேஷ் கார்த்திக் நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற்று உள்ளார்.இவர் 2004-ம் ஆண்டு இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.அதில் இருந்து இன்று வரை இந்திய அணிக்காக தினேஷ் கார்த்திக் விளையாடி வருகிறார்.

2007-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த  உலகக்கோப்பை தொடரில் ராகுல் டிராவிட் தலைமையில் சென்ற  இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்  இடம் பெற்றார்.ஆனால் அந்த உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை . அதன் பின்னர்  2011 மற்றும் 2015 -ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் தேர்வாகவில்லை.

இந்நிலையில் நேற்று நடந்த இந்திய , பங்களாதேஷ் போட்டியில் முதல் முறையாக உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக் களமிறங்கினர்.இப்போட்டியில்  கேதார் ஜாதவ்விற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும் ,  குல்தீப் யாதவ்விற்கு பதிலாக  புவனேஷ்வர் குமார் களமிறங்கினர்.

உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கு நேற்றைய போட்டி தான் முதல் போட்டி என்பதால் அதிக ரன்கள் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் 8 ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார்.

author avatar
murugan