டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை நேரில் சந்தித்தார் வைகோ !

டெல்லியில் இன்று பாஜக மூத்த தலைவரான அத்வானியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சென்று சந்தித்தார்.

நாடாளுமன்ற மாநிலங்களைவையில் எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் வைகோ நாளை பதவி ஏற்கிறார். இதற்காக கடந்த 2 தினங்களுக்கு முன்பாகவே டெல்லி சென்ற அவர் அரசியல் மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறார். திங்கள் கிழமை நாடாளுமன்றம் சென்ற அங்கு இருக்கும் மூத்த அரசியல் தலைவர்கள் பலரது சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

இந்நிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரும் , முன்னாள் மக்களவை உறுப்பினருமான அத்வானி அவர்களை டெல்லியில் அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். மேலும், இந்த சந்திப்பு மரியாதையை நிமித்தமான சந்திப்பு என்றும் இதில் எந்தவித அரசியலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.