தமிழகத்தில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை…!

  • தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது.
  • 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தளர்வுகளின்படி,பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையானது தொடங்கியுள்ளது.

அதன்படி,6000க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில்,9 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்,11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது.

இதனால்,மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வருகிறார்கள்.

மேலும்,மாணவர்களுக்கான மாற்றுச்சான்றிதழ் வழங்கவும்,இலவச பாடப்புத்தகங்கள் வழங்கவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்,சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில்  மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆய்வு செய்யவுள்ளார்.