இயற்கை பேரிடர் சேதங்கள்.! பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது.! அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பு ஏற்பட கூடிய வாய்ப்புள்ள இடங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு தான் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

2018இல் தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரான காஜா புயலில் தமிழக மீனவர்களின் படகுகள் சேதமனடைந்தது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர். அவர் கூறுகையில், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பு ஏற்பட கூடிய வாய்ப்புள்ள இடங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு தான் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

அது அரசின் கடமை மற்றும் சட்டபூர்வமான நடவடிக்கை. இது நன்கொடை அல்ல எனவும், இதனை அரசு தட்டிக்கழிக்க கூடாது எனவும் உயர்நீதிமன்ற கிளை குறிப்பிட்டது. இதற்கு உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment