பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா நீக்கம்! புதிய தலைவராக நஜாம் சேதி வெளியான தகவல்.!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா நீக்கபட்டுள்ளார். புதிய தலைவராக நஜாம் சேதி நியமிக்கப்பட உள்ளதாக தகவல்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமிஸ் ராஜா அதிரடியாக நீக்கபட்டுள்ளார். ரமிஸ் ராஜாவுக்குப் பதிலாக முன்னாள் கிரிக்கெட் நிர்வாகி நஜாம் சேதி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய(பிசிபி) தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு ராஜாவை நீக்கியது. பிசிபியின் விவகாரங்களை நிர்வகிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், கிரிக்கெட் அமைப்பின் புதிய தலைவராக சேதியை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து சேதி ட்விட்டரில், ரமீஸ் ராஜா தலைமையிலான கிரிக்கெட் ஆட்சி இனி இல்லை. 2014 பிசிபி அமைப்பு மீட்டெடுக்கப்பட்டது. முதல்தர கிரிக்கெட்டுக்கு புத்துயிர் அளிக்க நிர்வாகக்குழு, அயராது பாடுபடும். ஆயிரக்கணக்கான கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும், கிரிக்கெட்டில் பஞ்சம் முடிவுக்கு வரும் என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment