விமர்சனங்களுக்குள் சிக்காமல் ஆளுநர் செயல்பட வேண்டும்.! டிடிவி.தினகரன் கருத்து.!

ஆதார் எண் உடன் மின் இணைப்பை இணைக்கும் செயல்பாட்டுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். – டி.டி.வி.தினகரன். 

ஆன்லைன் விளையாட்டு தடை சட்ட மசோதாவுக்கு இன்னும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்த்து வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து அமமுக கட்சி தலைவர் டிடிவி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் இன்று செய்தியாளர்களிடன் கூறுகையில், சட்ட மசோதா என்பது எந்த ஆட்சி காலத்தில் கொண்டு வந்தாலும் சரி. அதனை காலம் தாழ்த்தாமல் ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்து அமல்படுத்த வேண்டும்.

ஆளுநர் செயல்பாட்டிற்கு உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் என்பவர் விமர்சனங்களுக்குள் சிக்காமல் தனது பணிகளை வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அடுத்து, தனது காட்சிப்பணிகள் குறித்து பேசுகையில் , அமமுக தேர்தலை நோக்கிய செயல்பாடுகளை செய்து வருகிறது. கட்சி வளர்ச்சி செயல்பாடுகளும் தொடர்ந்து நடைபெபெற்று வருகிறது. என தெரிவித்தார்.

ஆதார் எண் உடன் மின் இணைப்பை இணைக்கும் செயல்பாடு குறித்து தினகரன் பேசுகையில், இதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். ஒருவேளை டிசம்பர் 31க்குள் 100 சதவீதத்தை எட்ட முடியவில்லை எனில் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். எனவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment