எலும்புகளை வலுவாக்க இந்த உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள்..!

எலும்புகளை உறுதியாக்க இந்த உணவுகளை சேர்த்து கொண்டாலே போதும்.

மனிதன் நடக்க, ஓட, வேலை செய்ய, சாப்பிட என அனைத்திற்கும் உடலில் உள்ள எலும்பு பயன்படுகிறது. அந்த எலும்பு உறுதியாக இருந்தால் தான் நாம் வலிமையாக இருக்க முடியும். இல்லையெனில் எந்த வேலை செய்யவும் நம்மால் இயலாது. உடல் சோர்வாக இருக்கும். இதற்கு காரணம் உடலில் உள்ள எலும்புகளில் வலு குன்றி போய் இருக்கும். இதனை சரி செய்ய நமது உடலில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள், இரும்பு, மெக்னீசியம், புரதம் போன்ற சத்துக்கள் தேவை. முக்கியமாக கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். பால், பாலாடை கட்டி மற்றும் முட்டை போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது.

காய்கறி வகைகளில் புரோகோலி, கீரை, முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்றவற்றை எடுத்து கொள்வது அதிக நன்மை தரும். அடுத்தப்படியாக உலர் பருப்பு வகைகள், உலர் பழங்கள், சோயா, ஓட்ஸ், பாதாம் போன்றவை கால்சியம் நிறைந்துள்ள பொருட்கள். சால்மன் மீன், காளான் போன்றவற்றிலும் வைட்டமின் டி சத்து அதிகமாக காணப்படுகிறது. சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்ளுங்கள். பூசணி விதை, பச்சை காய்கறிகள், வாழைப்பழம் போன்றவை சேர்த்து கொள்ளுங்கள். இது போன்ற உணவுகள் உங்கள் உடலில் எலும்புகளை உறுதியாக்க உதவும்.

Leave a Comment