“இரு வேளை மட்டுமே உணவு;இனிதான் மோசமான விஷயங்கள்” – எச்சரிக்கும் இலங்கை பிரதமர்!

“இரு வேளை மட்டுமே உணவு;இனிதான் மோசமான விஷயங்கள்” – எச்சரிக்கும் இலங்கை பிரதமர்!

Default Image

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கை மக்கள் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சை அடைந்து வருகின்றனர்.அவ்வப்போது,கடல் வழியாக பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் சிலர் கைதும் செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில்,இலங்கை மக்கள் தினமும் இரு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக,இலங்கை கல்லூரியில் நிகழ்வில் பேசிய பிரதமர் ரணில் கூறுகையில்:”இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியின் தொடக்க நிலையில்தான் உள்ளது. எனவே,இனிதான் மிக மோசமான விஷயங்கள் நிகழப்போகிறது இதனால்,மக்கள் தினமும் இரண்டு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும்.

இதன்காரணமாக,இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய,சில பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. இதனால்,நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மாறாக நிதியுதவி கிடைக்காவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

இதனிடையே,போதியளவு உரங்கள் இல்லாததால் செப்டம்பர்,அக்டோபர் வரை மட்டுமே நாட்டில் உணவு விநியோகம் நீடிக்கும்.ஆனால்,நமது நாட்டிற்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது.ஏனைய நாடுகளும் உதவுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube