டும்…..டும்….டும்….!!! நடிகை ரிச்சாவிற்கு திருமணம்….!!!

தமிழில் மயக்கம் என்ன, ஒஸ்தி போன்ற படங்களில் நடித்த நடிகை ரிச்சாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நடிகை ரிச்சா சமீப காலமாக தமிழ் சினிமாவின் பக்கமே வருவதில்லை என தகவல்கள் வெளியாகியுயுள்ளது. இந்நிலையில், தமிழில் மயக்கம் என்ன, ஒஸ்தி போன்ற படங்களில் நடித்த நடிகை ரிச்சாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்ற ரிச்சா, தனது கல்லூரி நண்பர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜோ என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment