நடிகை ஜோதிகா நடிக்கும் படத்திற்கு பெயர் இதுவா….?

  • நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.
  • ஜோதிகா ஆசிரியை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு `ராட்சசி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடித்து வெளியான குஷி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். ஜோதிகா ஆசிரியை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு `ராட்சசி’ என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஆக்‌‌ஷன் காட்சிகள் கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது கல்யாண் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்ததாக ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment