25 வயது இளைஞனாக நடிகர் விஜய்? VFX-க்கும் மட்டும் ‘தளபதி 68’ படக்குழு ஒதுக்கியது எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தன்னுடைய 68வது திரைப்படத்தில் விஜய் தற்போது நடிக்க தொடங்கிவிட்டார். தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும், இந்த திரைப்படத்திற்கான பூஜை அக்டோபர் இரண்டாம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால், அந்த பூஜையில் பெரிதளவில் யாருமே கலந்து கொள்ளவே இல்லை.

அதற்கு காரணம் யாரையும் பெரிதாக அந்த பூஜைக்கு அழைப்புவிடுக்க வில்லையாம். ஏனெனில்,  விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகிறது. எனவே, அந்த திரைப்படம் வெளியாகி வெற்றி அடைந்த பிறகு வரிசையாக தளபதி 68 திரைப்படத்தின் அப்டேட் வெளியிட “தளபதி 68” படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.

எனவே, படத்திற்கான பூஜைக்கான ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்கள் ‘லியோ’ படம் வெளியான பிறகு தான் வரும். இருப்பினும் தளபதி 68 குறித்த தகவல்கள் பரவி வருகிறது வழக்கமான ஒன்றாகவும் ஆகிவிட்டது.  அந்த வகையில், படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

அதைப்போல மற்றொரு தகவல் என்னவென்றால் இந்த தளபதி 68  திரைப்படத்தில் நடிகர் விஜய் 25 வயது மகனாகவும் சற்று வயதான ஒரு தந்தை என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவியது . இந்த நிலையில் தற்போது அந்த இளம் வயது விஜயாக நடிக்கும் காட்சிக்கு ‘VFX ‘பயன்படுத்தப்படவுள்ளதாம்.

அந்த ‘VFX ‘ காட்சிக்கு மட்டும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஜிஎஸ் நிறுவனம் 20 கோடி வரை பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளதாம். எனவே, வித்தியாசமான முயற்சிகளுடன் தளபதி 68 படம் உருவாகி வருவதன் காரணத்தால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும், விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.