#BREAKING : தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கினார் நடிகர் வடிவேலு…!

தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நிதியுதவி வழங்கி வரும் நிலையில், தமிழ் திரையுலகின் பிரபலமான காமெடி நடிகர் வடிவேலு அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.5 லட்சம்  வழங்கியுள்ளார்.

அதன்பின்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி  செய்கிறார். இந்த கொரோனா காலகட்டத்தில், உங்களையும் உங்கள் சந்ததிகளையும்  கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தி உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.