இல.கணேசன் சகோதரர் பிறந்தநாள் விழா.! நடிகர் ரஜினிகாந்த் நேரில் பங்கேற்பு.!

சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெறும் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் வந்துள்ளார்.

மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் அவர்களின் சகோதரர் அவர்களின் 80வது பிறந்தநாள் விழா, சதாபிஷேக விழாவாக இன்று கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெகு விமர்சியாக நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.. அதே போல சினிமா பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் தற்போது கலந்துகொண்டார். வழக்கம் போல தனது விறுவிறு நடையில் பொதுமக்களை பார்த்து கையசைத்துவிட்டு மண்டபத்தின் உள்ளே சென்றார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment